யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
சாப்பிட தெரியுமா?
- பெரு
'உனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்' என்று சிலரை பார்த்து கேலியாக சொல்வதுண்டு. ஆனால், உண்மையிலேயே பெரும்பாலானோருக்கு எப்படி சாப்பிவேண்டும் என்பதே தெரியவில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

எப்படி சாப்பிடவேண்டும் என்பது பற்றிய சில குறிப்புகள்:

* பசிக்கும்போது மட்டுமே உண்ணவேண்டும்.

* உணவை சற்று சூடாக சாப்பிட்டால் எளிதில் செரிமாணம் ஆகும்.

* உணவை அப்படியே விழுங்காமல், நன்றாக மென்று உண்ணவேண்டும். இதன் மூலம் பற்களுக்கு வலு கூடுகிறது. எளிதில் உணவு ஜீரணம் ஆவதால், ஜீரண உறுப்புகளுக்கும் வேலை குறைகிறது.

* சாப்பிடும்போது, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ குடிநீர் அருந்தக்கூடாது. மற்ற நேரங்களிலும் இதை பின்பற்றுவது உடலுக்கு நல்லது.

* உணவின்போது, அதிக காரம் மற்றும் அதிக புளிப்பு சுவைகளை தவிர்க்கலாம். அதிகமான இனிப்புப் பொருட்களையும் ஒதுக்க வேண்டும். இவை பசியை கெடுப்பதோடு உடல் நலத்துக்கு தீமையை ஏற்படுத்தும்.

* அசைவ உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

* மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது. அளவாக அல்லது ஒரு பிடி குறைவாக உண்ணலாம். சாப்பிட்டவுடன் சிறிது ஓய்வு தேவை. மதிய உணவு முடிந்ததும் உடனடியாக பணியில் ஈடுபடக்கூடாது.

* இரவு உணவு முடிந்தவுடனேயே தூங்க செல்வதை தவிர்க்கவும். அப்படி சென்றால் தூக்கம் முழுமையாக இருக்காது. தேவையற்ற கனவுகள் தோன்று தூக்கத்தை அலைகழிக்கும்.

* அனைத்து விதமாக சத்துக்களையும் கொண்ட, சமச்சீரான உணவுகளை சாப்பிட வேண்டும்.

* மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், அதிக உணவு உண்ணுவதை தவிர்க்கவும். இதனால், சிந்திக்கும்போது புதிய சிந்தனைகள் வராது. அதற்கு பதிலாக தூக்கம்தான் வரும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சுட்டிகளுக்கு 'ஹேர் கட்' செய்ய கடைக்குப் போகிறீர்களா?
நெஞ்செரிச்சல் இருப்பின் கார உணவைத் தவிர்ப்பீர்!
வியர்வை நாற்றத்தைப் போக்க எளிய வழி!
நினைவாற்றலைப் பெருக்க உதவும் ஆப்பிள், ஆரஞ்ச், வாழைப்பழம்
இளநரையைத் தடுக்க எளிய வழி!
ஒரே வகை ரத்தப் பிரிவு இருந்தால்...
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace