|
| நினைவாற்றலைப் பெருக்க உதவும் ஆப்பிள், ஆரஞ்ச், வாழைப்பழம் | |
வயோதிகர்களுக்கு மட்டுமின்றி, வயதில் இளையவரான பலருக்கும் நினைவாற்றல் போதுமானதாக இல்லாத நிலை ஏற்படுகிறது.
இதற்கு, உரிய உயிர்சத்துகள் (வைட்டமின்) குறைபாடே முதன்மையான காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை செய்வது மிக மிகச் சுலபம் என்றால் நம்பமுடிகிறதா?
ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நாம் நிதமும் ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு ஆகிய பழங்களை உட்கொண்டோமானால் நினைவாற்றல் பெருகுவதோடு, மூளையும் உரிய முறையில் பாதுகாக்கப்படுகிறது.
இதனை, நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு ஒன்றின் மூலம் நிரூப்பித்துள்ளனர்.
இந்த மூன்று கனிகளிலும் உள்ள வைட்டமின் சத்துகள், மினரல் சத்துகள் மற்றும் ஃபைபர் ஆகியவை, மூளைக்கு உறுதுணைபுரிவதாக அந்த ஆய்வு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறது.
எனவே, நம் அன்றாட உணவில் இம்முக்கனிகளைச் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வழிவகுப்போம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பீமா | | தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்... |
| |
|
|
|
|
|
|
|