யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
நெடுந்தூர விமானப் பயணிகள் கவனத்துக்கு..!
- தொகுப்பு : எஸ்.சரவணன்
காலையில் கலிஃபோர்னியாவில் காஃபி குடித்துவிட்டு, மாலையில் மலேசியாவில் தேநீர் பருகும் உலகம் சுற்றும் தொழில் நிர்வாகிகள் பலர், அவ்வப்போது நெடுந்தூர விமானப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இத்தகையோர் மட்டுமின்றி, பொதுவாக நெடுந்தூரம் செல்லும் விமானப் பயணிகளும் தங்களது பயணத்தின்போது எத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

நெடுந்தூரப் பயணத்தின்போது, இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைக் கடைப்பிடிக்காமல் இறுக்கமான ஆடைகள் அணிந்து பயணிப்போருக்கு, டீப் வெய்ன் த்ரோம்போசிஸ் (டிவிடி) என்று அழைக்கப்படுகிற நலக்குறைவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

அதாவது, இருதயத்துக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாயான 'சிரை'யில் இரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனால், விமானத்தில் நெடுந்தூரம் பயணிப்போர் கண்டிப்பாக தளர்வான, காற்றோட்டமான ஆடைகளையை அணிய வேண்டியது அவசியம்.

இது ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பொருந்தும். அத்துடன், கடைசி மாத கர்ப்பிணிப் பெண்கள் விமானப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதும், குழைந்த பிறந்து முதல் வாரத்தில் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பதும் மருத்துவர்களின் அறிவுரை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காய்ச்சல் இருக்கும்போது குளிக்கலாமா...?
தடுப்பூசிகளால் தழும்புகள் ஏற்படுவது ஏன்?
ஜலதோஷத்தைப் போக்க எளிய குறிப்பு!
காதில் பூச்சி நுழைந்தால்....
அல்சர் உருவாவது ஏன்?
மாரடைப்பு எந்த வயதில் ஏற்படும்?
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace