|
| வயிற்றுப்புண் குணமாக... | |
வயிற்றுப் புண் வந்துவிட்டால் ஏற்படும் அவஸ்தை சொல்லி மாளாது. வயிற்றுப் புண்ணை தொடர்ந்து வாய், உதடு மற்றும் நாக்கில் உட்புறம் போன்ற பகுதிகளிலும் புண்கள் ஏற்படும். வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். சாப்பிட சிரமாக இருக்கும். இதேநிலை தொடர்ந்தால் மேலும் பல நோய்கள் உருவாகும்.
எனவே, வயிற்றில் புண் வந்துவிட்டால் உடனே அதை குணப்படுத்த வேண்டும். அதற்கு எளிய வைத்திய முறை இது.
* காலை எழுந்தவுடன் ஒரு தம்ளர் தேனில் தண்ணீர் கலந்து குடிக்கவும். தேனில் சீரகப் பொடி கலந்தும் குடிக்கலாம். .
* வேப்பிலை, அருகம்புல், வெந்தயக் கீரை, மணத் தக்காளி, முருங்கை இலை, குப்பைமேனி, புதினா, கொத்துமல்லி போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு எடுத்து , 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சவும். இதை சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக பருகவும்.
* பழங்கள், காய்கள், வெஜிடபிள் சாலட், புரூட் சாலட், புரூட் ஜுஸ், இளநீர் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடவும்.
* மதிய உணவில் வேகவைத்த காய்கள், கீரைகள் போன்றவனவாக அதிக அளவில் சேர்க்கவும்.
* தினம் 6 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கவும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
|
|
|
 | | FE |
| | | சிவாஜி | | பிரமாண்டங்களை பிலிமுக்குள் கொண்டு வருகிற ஷங்கர், வெற்றியை மட்டுமே இலக்காக கொண்ட ஏவி.எம்.நிறுவனம்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - சிக்குன் குனியா... இந்தப் பெயரைக் கேட்டாலே மக்களிடையே ஒருவித பீதி ஏற்படுகிறது... |
| |
|
|
|
|
|
|
|