|
| அதிர்ச்சியில் மயக்கம் | |
எதிர்பாராத விதமாக ஏதேனும் அதிர்ச்சியான செய்திகளை கேட்டாலோ அல்லது காட்சிகளை பார்த்தாலோ பலர் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவர். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
நாம் அதிர்ச்சி அடையும்போது, அட்ரீனல் சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது. இதனால் நரம்பு மண்டலமும் தூண்டப்படுகிறது.
இதன் விளைவாக மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடுகிறது. இதனால் அதிர்ச்சியான செய்திகளை கேட்பவர்கள் மயக்கமாகி கீழே விழுகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|