|
| சிகப்பு பூவின் கறுப்பு மேஜிக் | | - தொகுப்பு : கணேஷ் மரியதாஸ் |
|
மருத்துவ மலர்களில் செம்பருத்தியும் ஒன்று. செக்க செவேர் செம்பருத்தி பாக்க மட்டும் அழகல்ல பலனிலும் சூப்பர் தான். கூந்தல் பராமரிப்புக்கு இதைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என்று அடித்து சொல்லலாம். சிவந்த செம்பருத்தி இதழ்கள் செய்யும் கருகரு மேஜிக்கை கொஞ்சம் பார்க்கலாமா?
மிஸ் கூந்தல் என்ற பட்டத்தை தேடி வரச் செய்யும் அளவுக்கு கருகரு கூந்தல் நீளமாக வளர கலக்கல் தைலம் இது. செம்பருத்திப் பூவை இடித்து சாறு பிழிந்து கொள்ளுங்கள். இந்த சாறுக்கு சம்மாக தேங்காய் எண்ணெய் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து காய்ச்சுங்கள். தேங்காய் எண்ணெயின் கொதி வாசனை வருவதற்கு முன்பே இறக்கி விட வேண்டும்.
இந்த தைலத்தை தினமும் தேய்த்து வர, முடி வளர்ச்சி தூண்டப்பட்டு கருகருவென முடி வளரும். தலையில் உள்ள பிசுக்கை போக்கவும், இந்தத் தைலம் பயன்படும். இந்த தைலத்தில் சில துளிகள், வைட்6டமின் தைலத்தில் சில துளிகள் இரண்டையும் தனித்தனியே தலையில் தேய்த்து மசாஜ் செய்த் தலையை வாருங்கள்.
ஒரு துணியால் ஆவி ஓத்தடம் கொடுத்து, பிறகு வெறும் தண்ணீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இப்படி செய்து பாருங்கள் தலையில் உள்ள பிசுக்கு நீங்கி முடி பளபளவென மின்னும். மேலும் தலையில் பொடுகும் நரையும் ஏற்படாமல் கூந்தல் பொலிவில்லாமல் போய் விடும். அப்படிப்பட்ட நேரத்தில் கூந்தலை பாதுகாக்கிறது, இந்த செம்பருத்தி பேக்
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|