யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
தழும்புகளை குணப்படுத்தும் 'அவோடெர்மின்' மருந்து!
ஒருமுறை உடலில் தழும்புகள் ஏற்பட்டுவிட்டால் அதை மருந்துகள் மூலம் குணப்படுத்துவது இயலாத காரியம் என்று தான் இதுவரை மருத்துவ உலகில் கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தழும்புகளை குணப்படுத்தவும் புதிய மருந்துகள் கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டன.

லண்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக் கழத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 'அவோடெர்மின்' என்ற புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

வெட்டுக்காயம் ஏற்பட்ட அல்லது அறுவைச் சிகிச்சைகள் செய்துக்கொண்ட சுமார் 200 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இந்த மருந்து பரிசோதித்து பார்க்கப்பட்டது.

அதன்படி, நோயாளிகளின் காயங்கள் அல்லது அறுவைச் சிகிச்சை செய்யப்படும் இடத்தில், தோலுக்கு அடியில் இந்த மருந்து தடவப்பட்டு, பின்னர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

காயங்கள் குணமான பின்னர், அதனால் ஏற்பட்ட தழும்புகளும் படிப்படியாக மறைய ஆரம்பித்தது. இதனால், தழும்புகளை குணப்படுத்துவதில் 'அவோடெர்மின்' மருந்து நல்ல பலன் அளிப்பது உறுதி செய்யப்பட்டதாக லண்டனில் இருந்து வெளிவரும் 'லான்செட்' என்ற மருத்துவ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நெஞ்சு எரிச்சலால் அவதியா?
உப்பும் உடல் பருமனும்
மூட்டு வலிக்கு நவீன சிகிச்சை
மருத்துவ குணமிக்க கேரட்!
தலை சுற்றலை தவிர்க்கலாம்!
இளநரையை போக்கும் மருதாணி
செய்திகள்
தமிழகம் - இலங்கை அதிபர் ராஜபக்சேவால் எந்த சூழ்நிலையிலும் விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்று கூறிய வைகோ...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அயன் - விமர்சனம்
கடத்தலும், காதலுமாக செல்லும் பட்டத்தா‌ரி வாலிபனின் கதை.புத்திசாலித்தனமான காட்சிகளால் சில இடங்களில் பிரமிக்க வைத்திருக்கிறார்கள் கே.வி.ஆனந்தும், சுபாவும்...
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
காஞ்சிவரம் - விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...