யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
தலை சுற்றலை தவிர்க்கலாம்!
WD
மக்கு ஏற்படும் திடீர் அவஸ்தைகளில் ஒன்று, தலைச்சுற்றல்!

தலைச் சுற்றல் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, அதை சரி செய்வது எப்படி என்பது போன்ற சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்குகிறார் சென்னையை சேர்ந்த டாக்டர். எஸ்.அமுதகுமார்.

"தலை சுற்றல் என்பது ஓர் நோயல்ல; நோய் வருவதற்கான அறிகுறி அவ்வளவே" என்று கூறும் டாக்டர். அமுதகுமார், தலைச்சுற்றலுக்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார்.

1.அதிக ரத்த அழுத்தம்:

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் தலை சுற்றல் ஏற்படும். ரத்தஅழுத்த நோய் உள்ளவர்கள் இதை உணர்ந்துகொள்வர்.

செய்ய வேண்டியது:

இந்த மாதிரி நேரத்தில் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அந்த இடத்திலேயே நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட வேண்டும். காபி அல்லது ஜூஸ் போன்ற பானம் அருந்தலாம். முடிந்தால், காற்றோற்றமான இடத்தில் படுத்து சிறிது ஓய்வு எடுக்கலாம்.

2. சர்க்கரை அளவு குறைதல்:

ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு குறைவதாலும் தலைச்சுற்றல் ஏற்படும். இதற்கு 'ஹைப்போக்ளைசீமியா' என்று பெயர்.

செய்ய வேண்டியது:

இந்த மாதிரி தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாக 2 கரண்டி சர்க்கரையை தண்ணீரில் கலக்கி குடிக்க வேண்டும். சிறிது நேரத்தில் தலைச்சுற்றல் நின்றுவிடும்.

3. உள்காதில் பிரச்சனை:

நாம் நடந்து செல்லும்போது, எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் நேராமல் செல்வதற்கு உறுதுணையாக் இருப்பது, உள் காதில் உள்ள உறுப்புகள்தான். எனவே, காதின் உட்புறத்தில் பாதிப்பு இருந்தாலும் தலைச் சுற்றல் ஏற்படும்.

செய்ய வேண்டியது:

உடனடியாக ஓர் சிறந்த காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று முறையான மருத்துவச் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.

பெண்களுக்கு...:

பெண்களை பொறுத்தவரை பல்வேறு காரணங்களினால் தலைச் சுற்றல் ஏற்படலாம். குறிப்பாக, ரத்தச் சோகையினாலோ அல்லது கர்ப்பத்தினாலோ தலைச் சுற்றல் ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம் என்ன என்பதை அறிந்து முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது நல்லது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இளநரையை போக்கும் மருதாணி
மாறு கண் உள்ளவரா நீங்கள்?
கணினியும், கண் பார்வை பாதிப்பும்..
இருதய நோயாளிகளுக்கு மரபணு சிகிச்சை
இதயத்துக்கு ஏற்ற பச்சைத் தேநீர்
செவித்திறனை பாதுகாக்க...
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...