யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
மாறு கண் உள்ளவரா நீங்கள்?
மாறு கண் இருந்தால் அதிர்ஷ்டம் வரும் என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இது ஆபத்தானது. அதற்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் எஸ். அமுதகுமார் கூறுவதாவது:

Dr. Amudha Kumar
WD
மாறு கண் நோயை 'ஸ்குயிண்ட்' அல்லது 'ஒன்னரைக் கண்' என்று கூறுவார்கள். இத்தகைய பார்வையுடன் குழந்தை பிறந்தால், அதை அதிர்ஷ்டம் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறானது.

எதனால் மாறு கண் ஏற்படுகிறது? : நமது ஒவ்வொரு கண்ணிலும் 6 தசை நார்கள் உள்ளன. இவை தான் கண்களை இழுத்துப் பிடித்து நேராக வைத்திருக்கின்றன. கண்களின் வெளிப்புறத்தில், அதையொட்டி தசை நார்கள் உள்ளன.

கண்களை மேலும் கீழுமாகவோ, வலப்புறம் இடப்புறமாகவோ அசைத்துப் பார்க்க, இந்த தசை நார்கள் உதவுகின்றன. தசை நாரை இயக்குவது மூளையாகும்.

ஏதாவது தசை நார் கண்ணை சரியாக இழுத்துப் பிடிக்காமலோ, அல்லது கரு விழியை ஒரு முனையை நோக்கி செலுத்தாமலோ இருந்தால், மாறு கண் உண்டாகிறது.

அறுவை சிகிச்சைத் தான் தீர்வு: வீட்டில் குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ மாறு கண் இருந்தால் அறுவை சிகிச்சை செய்து அதனை சரி செய்து கொள்ளலாம். ஆனால் கண் கண்ணாடி அணிந்து அதை குணப்படுத்த முடியாது.

குழந்தைப் பருவத்திலேயே இந்த குறைப்பாட்டைக் கண்டறிந்தால் எளிதாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாம். எனவே மாறு கண் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், உடனே கண் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கணினியும், கண் பார்வை பாதிப்பும்..
இருதய நோயாளிகளுக்கு மரபணு சிகிச்சை
இதயத்துக்கு ஏற்ற பச்சைத் தேநீர்
செவித்திறனை பாதுகாக்க...
இதயநோயை முன்கூட்டியே தடுப்போம்
மாரடைப்பு, பக்கவாதம் வராமலிருக்க...
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்...
மேலும் படிக்க|மேலும்...