யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
இதயத்துக்கு ஏற்ற பச்சைத் தேநீர்
நம்மில் பெரும்பாலானோருக்கு தேநீர் அருந்தாமல் இருக்க முடியாது. அந்த நேரங்களில் பச்சைத் தேநீரைக் குடித்தால் இதய நோய் உங்களை அண்டாது.

அதென்ன பச்சை தேயிலை? தேயிலையில் பல வகைகள் உள்ளன. கொழுந்தாக இருக்கும் தேயிலையில் இருந்து வரும் முதல் பிரிவை வெள்ளை தேயிலை என்பார்கள். அதை கொதிக்க வைத்தால் எந்த நிறமும் கிடைக்காது.

இரண்டாம் பிரிவு தான் பச்சைத் தேயிலை. அதாவது தேயிலையைப் பறித்து உலர்த்துவதற்கு முன்பு அதனை தீயில் வாட்டி அல்லது நீராவியில் வேக வைக்கப்படுகிறது. இது மஞ்சள் கலந்து பச்சை நிறத்தில் காணப்படும்.

பச்சைத் தேயிலையை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை மட்டும் சேர்த்து அருந்தினால் உடலுக்கு மிகவும் ஏற்றது. தற்போது பச்சைத் தேநீர் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.

லண்டனில் நிக்கோலஸ் அலெக்சோபோலஸ் தலைமையில் நடந்த பச்சைத் தேயிலைப் பற்றிய ஆய்வில், உடலுக்கு உற்சாகத்தையும், பல்வேறு நலன்களையும் பச்சை தேயிலை அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பச்சைத் தேயிலையை பருகுவதன் மூலம் நமது ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறைக்கப்படுகிறது. இதய நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் ரத்த நாளங்களில் ரத்தம் எளிதாகச் சென்றடைகிறது. இதயமும் எவ்வித சிரமும் இன்றி தனது பணியைச் செய்ய முடிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
செவித்திறனை பாதுகாக்க...
இதயநோயை முன்கூட்டியே தடுப்போம்
மாரடைப்பு, பக்கவாதம் வராமலிருக்க...
உடல் எடையைக் குறைக்க எளிய வழி
மழைக்கால நோய்களை தடுக்க என்ன செய்யலாம்?
விந்துச் சுரப்பியில் பாதிப்பா?
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...