யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
மாரடைப்பு, பக்கவாதம் வராமலிருக்க...
திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 16:50 IST )
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறைந்த நேரம் தூங்கினால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பாக ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில், உயர் ரத்த அழுத்தம் உடைய 33 முதல் 97 வயதுக்குட்பட்ட 1,255 பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. சராசரியாக 50 மாத காலத்திற்கு இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 99 பேருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்டதோடு, சிலர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இரவில் குறைந்தது ஏழரை மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கியவர்களில் 68 சதவீதம் பேருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் ஏற்பட்டதாகவும், குறிப்பிட்ட அளவுக்கு தூங்கியவர்களுக்கு அந்த பாதிப்பு அவ்வளவாக இல்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தவிர இரவு நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் குறையாமல் இருந்தவர்களுக்கே மாரடைப்பு வாய்ப்புகள் அதிகம் இருந்ததாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மிகவும் குறைந்த நேரமே தூங்கியவர்களில், இரத்த அழுத்தம் குறையாமல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்புகள் மற்றவர்களைக் காட்டிலும் 4 மடங்கு அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.

தூக்கம் குறைவதால் உடலின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இது இதயக் கோளாறுக்கு வித்திடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உடல் எடையைக் குறைக்க எளிய வழி
மழைக்கால நோய்களை தடுக்க என்ன செய்யலாம்?
விந்துச் சுரப்பியில் பாதிப்பா?
நவீன 'காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி' சிகிச்சை!
பாக்டீரியா தொற்றால் மற்ற நோய் வராது!
இதயத்தை காப்போம்!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...