யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
உடல் எடையைக் குறைக்க எளிய வழி
குண்டானவர்களின் உடல் எடையைக் குறைக்க உதவும் செல்பேசியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இன்று உலகின் எந்தவொரு நாட்டிலும் செல்பேசியின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. ஒரு பக்கம் செல்பேசியால் பல நன்மைகள் இருந்தாலும், அதனால் சில தீமைகளும் இருப்பதாகச் சொல்லி சிலர் நம்மை எச்சரிக்கவும் செய்கிறார்கள்.

இந்நிலையில், உடல் பருத்தவர்களின் எடையைக் குறைக்க உதவும் செல்பேசியை அமெரிக்காவின் பிரிகாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில், தங்களின் புதிய வகை செல்பேசியை 120 பேரிடம் கொடுத்து பயன்படுத்தச் செய்தனர். இதன் இறுதியில் அனைவரது உடல் எடையும் செல்போனை பயன்படுத்துவதற்கு முன்பு இருந்ததைவிட கணிசமாகக் குறைந்து காணப்பட்டது.

இந்த வகை நவீன செல்பேசியைப் பயன்படுத்தும் போது பசி எடுப்பது குறைந்து உடலில் வளர்சிதை மாற்றம் துரிதமாக நடைபெறுகிறதாம்.இதுவே எடை குறைவுக்கு காரணம் என்கிறார்கள்.

குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல, உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுபவர்களும் இந்த செல்பேசியைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த புதியவகை செல்பேசியின் உத்தேச விலை குறித்தோ, அது எப்போது சந்தைக்கு வரும் என்ற விவரமோ வெளியாகவில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மழைக்கால நோய்களை தடுக்க என்ன செய்யலாம்?
விந்துச் சுரப்பியில் பாதிப்பா?
நவீன 'காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி' சிகிச்சை!
பாக்டீரியா தொற்றால் மற்ற நோய் வராது!
இதயத்தை காப்போம்!
விந்துப் பரிசோதனை : ஓர் அறிமுகம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...