|
| மழைக்கால நோய்களை தடுக்க என்ன செய்யலாம்? |
மழை காலத்தில் தொற்று நோய்களும் மலேரியா, சிக்கன் குனியா போன்றவையும் பரவலாம். அதைத் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.
இத் தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை: பொது சுகாதாரத்துறை இயக்ககத்தில் உள்ள உயர் அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று நோய் தடுப்புப் பணிகள் மேற்பார்வையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
மழைக் காலத்தில் தண்ணீர் மூலம் தொற்று நோய் பரவ வாய்ப்பு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு, காலரா, டைபாய்டு, காமாலை போன்ற நோய்கள் பரவலாம். கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா நோய் பரவவும் வாய்ப்புள்ளது.
எனவே மக்கள் அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சிய நீரை பருக வேண்டும். சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். வயிற்றுப் போக்குவரத்து ஏற்பட்டால் உப்பு கரைசல் நீரை பருக வேண்டும்.
மேற்படி நோய் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று இலவச சிகிச்சை பெறலாம். தொற்று நோய் பரவாமல் இருக்க ரூ. 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|