யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
எழில்மிகு ஓவியமே வலி நிவாரணி!
- தொகுப்பு : எஸ்.சரவணன்
'A thing of beauty is a joy forever' என்று சொன்னான் கவிஞர் ஜான் கீட்ஸ்.

அதை மெய்ப்பிக்கும் வகையில், 'எழில்மிகு ஓவியங்கள், நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக (Pain Killer) உதவும்' என்று இத்தாலிய மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, இத்தாலியின் பாரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெரினா டி தோமஸோ தலைமையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில், வலியால் அவதிப்படும் நோயாளிகளிடம் எழில் மிகுந்த ஓவியங்களைக் காட்டினால், அவர்களது வலி மறந்து போய்விடுகிறது எனபது தெரிய வந்துள்ளது.

'எழிலற்ற ஓவியங்களால் எவ்வித பலனுமில்லை. ஆனால், எழில் மிகுந்த ஓவியங்கள், நோயாளிகளை தங்களது வலியை மறக்கச் செய்து, மனதை திசைத் திருப்புகிறது," என்கிறார் ஓர் ஆய்வாளர்.

இசை... நமது மன அழுத்தத்தையும், வருத்தங்களையும் போக்கும் என்று ஏற்கெனவே சில மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இப்போது, அழகான ஓவியங்கள் நமது வலிக்கு நிவாரணியாக இருக்கும் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளிலுள்ள வார்டுகளில் நோயாளிகள் பார்க்கும் வகையில், சுவர்களில் எழில்மிகு வண்ண ஓவியங்கள் வரைவது சாலச் சிறந்தது என இத்தாலிய மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'கரு' குழந்தைக்கும் ஆபரேஷன்!
பதின்ம வயதினரின் மன அழுத்தத்தை கண்டறியும் வழிகள்!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த...
மன அழுத்தத்தைப் போக்க 'நம்பிக்கை' சிகிச்சை!
மஞ்சள், மிளகு: மருத்துவக் குணங்கள்
வெவ்வேறு இரத்த பிரிவினருக்கு மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...