|
| பதின்ம வயதினரின் மன அழுத்தத்தை கண்டறியும் வழிகள்! | |
பதின்ம வயதில் உள்ள மகனையோ, மகளையோ கண்காணிப்பதில் மிகுந்த அக்கறை காட்டுவது பெற்றோர்களின் கடமை.
இந்த வயதில், அவர்களது எண்ணங்களின் மாற்றம் ஏற்படும். எதிர்மறையான விளைவுகள் கொண்ட சூழலில் சிக்க நேர்ந்தால், அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடலாம்.
பதின்ம வயதினரின் மன அழுத்தத்தைக் கண்டறிவது மிக மிக கடினமான ஒன்றாகும்.
அதேநேரத்தில், அத்தகைய பருவத்தினரின் மன அழுத்தத்தை போக்கவில்லையெனில், பெரும் விளைவுகளை அது ஏற்படுத்திவிடும். அதனால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
மன அழுத்தத்துக்கான அறிகுறிகள், 13 வயதில் தொடங்கி 16 முதல் 24 வயது வரையில் வெளிப்படுகின்றன.
பதின்ம வயதினரின் மன அழுத்தத்தை, அவர்களது கவலை, பிடிவாதம், கவனக்குறைவு, பெரியோர்களின் சொல் பேச்சை கேளாமை போன்றவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்கிறது புதிய மருத்துவ ஆய்வு ஒன்று.
வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது நண்பர்களுடன் உரையாடும்போதோ, பதின்ம வயதினரின் மனநிலையை அறிந்துகொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தொடர்ந்து 2 அல்லது 3 வாரங்களுக்கு நீடித்து வந்தால், அவர்கள் மன அழுத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அந்தச் சூழலில் மன நல மருத்துவருடன் ஆலோசித்து, உரிய சிகிச்சை பெற வேண்டியது மிக மிக அவசியம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|