|
| மன அழுத்தத்தைப் போக்க 'நம்பிக்கை' சிகிச்சை! | |
மன அழுத்தம் என்ற உளவியல் ரீதியான பிரச்சனையைப் போக்குவதற்கு, மருந்து மற்றும் மாத்திரைகள் எவையும் தேவையில்லை; 'நம்பிக்கை சிகிச்சை' போதும் என்கிறது, அமெரிக்காவிலுள்ள ஓஹியோ பல்கலைக்கழகம்.
நம்பிக்கை சிகிச்சை பற்றி, பாஸ்டனில் உள்ள அமெரிக்க உளவியல் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில், உளவியல் துணை பேராசிரியர் ஜெனீபர் சேவன்ஸ் விவரித்துள்ளார்.
நம்பிக்கைக்கும், நேர்மறை எண்ணத்துக்கும் வேறுபாடு உள்ளது என்று தெரிவித்த அவர், மன அழுத்தத்தைப் போக்கும் வழிமுறை தொடர்பான ஆய்வுகளின் முடிவுகளைச் சுட்டிக்காட்டினார்.
அந்த ஆய்வுகளின்படி, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கை ஊட்டுவது மூலம், அவர்களில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம் உள்ளவர்களைக் கண்டறிந்து, நம்பிக்கையூட்டுபவர்கள் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படச் செய்ய வேண்டும்.
வாழ்க்கையில் தோல்வியால் துவண்டவர்களுக்கு, அவர்களது திறமையை கண்டுணர்ந்து, அதை வெளிப்படுத்துவதற்கு தூண்டுகோலாகவும், ஊக்கமாகவும் இருந்து செயல்படுவது நம்பிக்கை சிகிச்சையின் முக்கிய அம்சங்களாகும்.
அதாவது, மன அழுத்த பாதிப்புக்கு ஆளானோருக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம்.
வாழ்வில் நம்பிக்கை கொள்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தாலே, ஒருவரது மன அழுத்த பாதிப்பினை போக்கி விடலாம் என்கிறது, உளவியல் சார்ந்த மருத்துவ ஆய்வுகள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|