|
| மார்பகப் புற்றுநோயை இரத்தப் பரிசோதனையால் அறிய முயற்சி |
| 28 ஏப்ரல் 2008 ( 12:33 IST ) | |
மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளை, எளிய இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியும் வழிமுறை குறித்து பிரிட்டன் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த இரத்தப் பரிசோதனை மூலமாக, மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சைகளை வழங்க வழிவகை செய்யப்படும் என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக 'டெய்லி மெயில்' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், மார்பகப் புற்றுநோயின் துவக்க நிலையை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியும் ஆய்வு, இந்த ஆண்டின் இறுதிக்குள் உறுதி செய்யப்பட்டுவிடும் என்றும், அதன்பிறகு இம்முறை வழக்கத்துக்குக் கொண்டு வரப்படும் என்றும் அம்மருத்துவ ஆய்வாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முதற்கட்ட பரிசோதனைகள் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு இறுதிக் கட்ட சோதனை நடத்தப்படவுள்ளது. இதில் வெற்றி கிட்டும் பட்சத்தில், இரத்தப் பரிசோதனை மூலமாக மற்ற வகை புற்றுநோய்களைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அம்மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|