|
| முட்டை பிரியரா நீங்கள், உஷார்! |
| வாஷிங்டன் (ஏஜென்சி), 9 ஏப்ரல் 2008 ( 17:11 IST ) | |
வாரத்துக்கு ஏழு அல்லது அதற்கு மேல் முட்டைகள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரிங்காம் மகளிர் மருத்துவமனை மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி ஆகியவற்றை சேர்ந்த டாக்டர்கள் லூக் டிஜோஸே மற்றும் மைக்கேல் காஸியானோ ஆகியோர் முட்டையின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் முட்டை பற்றிய பல திடுக் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரபல மருத்துவ இதழ் ஒன்றுக்கு அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
வாரத்தில் 7 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் முட்டை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். நீரழிவு நோயாளிகள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நடுத்தர வயதினர் ஒரு வாரத்தில் 6 முட்டைகள் சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|