|
| குழந்தைகள் நடக்க தாமதமாவது ஏன்? | |
பொதுவாக குழந்தைகள் 8 அல்லது 10 மாதங்களில் நடக்க துவங்கும். ஆனால் சில குழந்தைகள் 2 ஆண்டுகள் வரை கூட நடக்க துவங்குவது இல்லை. பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் பலன் அளிக்காத நிலையில் பெற்றோர்கள் கடும் குழப்பத்துக்கு உள்ளாவர்.
இதுபோன்ற பெற்றோர்களுக்கு மருத்துவர் வழங்கும் ஆலோசனை:
பலம் மற்றும் பலவீனம் போன்ற அம்சங்கள் குழந்தைக்கு குழந்தை மாறுபடும். பரம்பரை குறைபாடுகள், கர்ப்பக் காலத்தில் தாய் எடுத்துக்கொண்ட மருத்துவ முறைகள் மற்றும் உணவு முறைகள் போன்ற பல்வேறு காரணிகள் இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணமாக இருக்கலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுப்பதால், சத்துக் குறைவு ஏற்பட்டு இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
எனினும், இதுபோன்ற குழந்தைகளை உடனடியாக சிறப்பு டாக்டர்களிடம் காண்பிக்க வேண்டும். எம்.ஆர்.ஐ. போன்ற நவீன ஸ்கேன்களின் உதவியுடன் குழந்தைகள் பிரச்சனை கண்டறியப்படும்.
கால் மூட்டு, எலும்புகள் போன்றவற்றில் குறைபாடுகள் இருப்பின் அறுவைச் சிகிச்சைகள் மூலம் இந்த குறைபாடு சரி செய்யப்படும்.
பலவீனம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்கள் இருப்பின், முறையான மருத்துவச் சிகிச்சை, உணவுப் பழக்க வழக்கங்கள் மூலம் சரிசெய்ய முடியும்.
எனினும், தற்போது தொழில்முறை பயிற்சி (ஆக்குபேஷனல் தெரபி) போன்ற சிகிச்சை முறைகள் பிரபலமடைந்து வருகின்றன. இதுபோன்ற பயிற்சிகள் அளிப்பதன் மூலம், குழந்தைகளை விரைவில் நடைபழக வைக்க முடியும்.
எனினும், குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களது மனதில் நம்பிக்கை ஊட்டி, நடைபழக வைப்பதில் பெற்றோருக்கு பெரும்பங்கு உண்டு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|