|
| காது கேளாமைக்கு 'காக்ளியர் இம்ப்ளான்ட்'! | |
பிறவிக்கோளாறு காரணமாக குழந்தையின் செவித்திறன் பாதிக்கப்படும் நிலையில் பேச்சுத் திறனும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. செவித்திறன் இல்லாத நிலையில் மூன்று வயதுக்குள் காக்ளியர் கருவியை உள்காதுக்குள் புகுத்தி கேட்கும் திறன் அடையச் செய்யலாம்.
அறுவை சிகிச்சை மூலகமாக 'காக்ளியர்' கருவி பொருத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை காயம் ஆறியவுடன், 10 தினங்களில் காக்ளியர் கருவியை இயக்கி, கேட்கும் திறன் அளிக்கப்பட்டுவிடும். ஒரே ஆண்டில் மற்ற குழந்தைகள் போலவே சிகிச்சை பெற்ற குழந்தையும் இயல்பாக பேச தொடங்கிவிடும்.
'காக்ளியர் இம்பிளான்ட்' என்ற எலக்ட்ரிக் சாதனமானது ஒலியில் வரும் எலக்ட்ரிக் சிக்னல்களை காதிலுள்ள நரம்புகள் வழியாக ஒலி அலைகளை கேட்க உதவி புரிவதாகும். பேசுவதற்கும், பேச்சைப் புரிந்து கொள்வதற்கும் இந்த கருவி பேருதவி செய்யக் கூடியதாகும்.
காதிலுள்ள நரம்பு மண்டலத்தோடு இணைந்து செயல்படுவதற்கு ஏற்றபடி இக்கருவி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இந்த சிகிச்சை வெற்றிகரமாக 1987 -ல் அமெரிக்க நோயாளி ஒருவருக்கு செய்து முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குழந்தை பிறந்தவுடன் கே.ஏ.வி. என்ற நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் குழந்தையின் செவித்திறனை அறிந்து கொள்ளலாம். இதற்கு ரூ. 500 மட்டுமே செலவாகும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|