யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா ஆராய்ச்சி
புதன்கிழமை, 20 மே 2009   ( 17:37 IST )
உலகையே உலுக்கி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட இந்தியா முடிவு செய்துள்ளது.

முதன் முதலில் மெக்ஸிகோவில் பரவிய இந்த உயிர்க்கொல்லி காய்ச்சல் படிப்படியாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாகப் பரவியது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை நூற்றக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த காய்ச்சல் ஒருவித வைரஸ் கிருமி மூலம் பரவுகிறது. இதற்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த கொடிய காய்ச்சல் இந்தியாவில் பரவியதற்கான அறிகுறிகள் இல்லை. இதுவரை ஒருவர் கூட பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்தியாவின் அதிவெட்பமான தட்பநிலையே இதற்கு‌க் காரணம்.

இருப்பினும் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருவதால் இது குறித்து விவாதிக்க மத்திய சுகாதாரத் துறையின் உயர் நிலைக் குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது.

இதில் சுகாதார ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை செயலர் வின்.என். கடோச் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவன உறுப்பினர்கள், சீரம் ஆராய்ச்சி மையப் பிரதிநிதிகள், உலக சுகாதார மையப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க குறுகிய கால மற்றும் நீண்டகாலத் திட்டம் செயல்படுத்தப்படும். குறுகிய கால திட்டத்தில் நோய் பரவாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீண்ட கால திட்டத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்தியச் செயலர் கடோச் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நோய்கள் ஏற்படக் காரணம்...
ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் : கோவை அரசு மருத்துவமனையில் இருவ‌ர் அனும‌தி
பன்றி காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா ஆராய்ச்சி
வீட்டிலேயே மருத்துவ சேவை : பிரதிபா பாட்டீல் யோசனை
உணவுக‌ளை‌ப் பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள் !
கால் ஆணி ஏற்பட காரணம்
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...