|
| குழந்தைகளுக்கு 2 வயது வரையிலும் தாய்ப்பால் கொடுக்கலாம் |
| புதன்கிழமை, 6 மே 2009 ( 18:01 IST ) | |
கொடிய நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க அவர்களுக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் 175வது ஆண்டு விழா மற்றும் உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது.
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்புராஜ் தலைமை வகித்து பேசுகையில், உலகத்தில் மனிதன் தோன்றியது முதல் ஆஸ்துமா நோயும் உள்ளது. குடும்பத்தில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.சிகரெட் பிடிப்பதால் ஆஸ்துமா வர அதிக வாய்ப்புள்ளது. புகை பிடிப்பதால் மட்டும் உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 5 கோடி பேர் இறக்கின்றனர்.இந்தியாவில் 5 லட்சம் பேர் இறக்கின்றனர்.புகையை சுவாசிப்பவர்களுக்கும் இந்நோய் வருகிறது.
ஆஸ்துமா நோய் வராமல் இருக்க குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இருந்து 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தொடர்ச்சியாக 2 ஆண்டு வரைகூட தாய்ப்பால் கொடுக்கலாம். இதனால் ஆஸ்துமா போன்ற கொடிய நோய்கள் தாக்காது.அரசு மருத்துவமனைகளில் ஆஸ்துமா நோயை குணப்படுத்த நவீன வசதிகள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி பெற்றுள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | நாளை நமதே - விமர்சனம் | | பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - ஜலதோஷத்தினால் இலேசாக தும்மினாலோ அல்லது இருமினாலோ உடனடியாக டாக்டரிடம் ஓடுவர் சிலர்.அப்படியெல்லாம் இல்லாமல் சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே மருந்துண்டு... |
| |
|
|
|
|
|
|