|
| 10 சதவீத இந்தியர்களுக்கு இதய நோய் |
இந்தியாவில் 10 சதவீத மக்களுக்கு இதய நோய் இருப்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் அண்மையில் நடைபெற்ற இதய நோய் தடுப்பு குறித்த கருத்தரங்கில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.
இந்த மக்களில் சுமார் 4 சதவீத கிராமப்புற மக்களுக்கு, நெஞ்சுப்பை தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை வழங்கும் நாளத்தில் நோய் உள்ளது.
வரும் 2016 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 6 கோடியே 80 லட்சம் பேர் இதய ரத்த நாள நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த கருத்தரங்கில் எச்சரிக்கப்பட்டது.
இதேபோல் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு ஆகிய நோய்களுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், புகைப் பழக்கம் ஆகியவற்றாலும் இதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
இதய ரத்த நாள நோய்கள் மற்ற பிரதேசங்களைக் காட்டிலும் தெற்காசிய பகுதி மக்களை பாதுக்கும் வாய்ப்பு 4 மடங்கு அதிகம் என்று, இந்த கருத்தரங்கில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - நிபந்தனையற்ற உடனடி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.ஆனால் ஆயுதங்களை முதலில் கீழே போட்டால்தான் பேச்சுவார்த்தை என்று இலங்கை அரசு கூறியுள்ளது... |
| |
|
|
|
|
 | | | யாவரும் நலம் - விமர்சனம் | | தமிழில் அதிகமாக க்ரைம் த்ரில்லர் வருவதில்லை. அப்படியே வருகிற படங்களும் அரைத்த மாவையே அரைத்து தலைவலியை ஏற்படுத்துவதுதான் மிச்சம். ஆச்சரியமாக பழையன கழிந்து... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சீப்பை பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இது கேசத்திற்கு கெடுதலை விளைவிக்கும்... |
| |
|
|
|
|
|
|