|
| உடலில் காயம் ஏற்பட்டால்... |
எதிர்பாராத விதமாக உடலில் காயம் ஏற்பட்டால், அவை தானாகவே ஆறிவிடும் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.
காயத்தை அலட்சியமாக விட்டால் என்ன நேரிடும் என்பதை சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் எஸ். அமுதகுமார் விவரிக்கிறார்.
பொதுவாக நம் உடலில் காயம் ஏற்பட்டால் மருந்து போட்டு குணப்படுத்துகிறோம். அல்லது சிலர் மருந்து போடாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்.
ஆனால், காயத்தின் வழியாக உடலில் டெட்டனஸ் கிருமி உள்ளே சென்றால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஜன்னி வருவதற்கு இந்த கிருமி தான் காரணம்.
காயத்தின் வழியாக உள்ளே நுழைந்த டெட்டனஸ் கிருமிகள், உள்ளே நுழைந்த ஒரு வாரத்தில் இருந்து 2 வாரத்திற்குள் நோயின் அறிகுறிகளை ஏற்படுத்தும்.
அடிக்கடி தலைவலி, உடலில் ஒருவகை நடுக்கம், லேசான மூச்சுத் திணறல், தாடை, கழுத்து, இடுப்புப் பகுதிகளில் வலி உள்ளிட்டவை இதன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கும்.
நோய் அதிகமான பின், உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி நோய் இருப்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்.
வரும் முன் காக்க வேண்டிய முக்கிய நோய்களில் டெட்டனஸும் ஒன்று. அதனால் தான் குழைந்தைகளுக்கு டெட்டனஸ் தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல் காயம் ஏற்பட்டால் டி.டி. ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதும் இதற்காகத் தான்.
எனவே, காயம் ஏற்பட்டால் அலட்சியமாக இருக்காமல் தடுப்பூசி போட்டுக் கொண்டு, டெட்டனஸ் நோயின் பயமின்றி நிம்மதியாக வாழுங்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|