|
| தடுப்பூசி முகாம்: தட்டம்மை இறப்பு எண்ணிக்கை குறைந்தது! |
| நியூயார்க் (ஏஜென்சி),, வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 16:58 IST ) | |
தடுப்பு ஊசி போடுவதன் காரணமாக, தட்டம்மை நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் கடந்த 7 ஆண்டுகளில் 74 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் குழந்தைகளின் உயிர் கொல்லி நோயாக இருந்தது தட்டம்மை. இந்நோயால், உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 540 குழந்தைகள் பலியாகி வந்தனர்.
இந்நிலையில், யுனிசெப், ஐ.நா.பவுண்டேஷன், உலக சுகாதார அமைப்பு, அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் மற்றும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுக்கான அமெரிக்க மையங்கள் ஆகியவை இணைந்து தட்டம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஈடுபட ஆரம்பித்தன.
அதன்படி, உலகம் முழுவதும் தட்டம்மை ஊசி முகாம்கள் துவங்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து தட்டம்மை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, கடந்த 2000ம் ஆண்டிலிருந்து கடந்த 2007ம் ஆண்டு வரையில் தட்டம்மை நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளன. இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது.
அதன்படி, கடந்த 2000ம் ஆண்டில் 7 லட்சத்து 50 ஆயிரமாக இறந்த தட்டம்மை இறப்பு எண்ணிக்கை, கடந்த 2007ம் ஆண்டில் 1 லட்சத்து 97 ஆயிரமாக குறைந்தது. அதாவது, கடந்த 7 ஆண்டுகளில் 74 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
என்றாலும், குழந்தைகளின் உயிர்கொல்லி நோய்களில் இன்றும் தட்டம்மை முக்கியநோயாக உள்ளது. இந்த கொடிய நோயை இன்றளவும் முழுமையாக ஒழித்துக் கட்டமுடியவில்லை.
தொடர்ந்து தட்டம்மை மருத்துவ முகாம்கள் நடத்துவதன் மூலம், இந்நோயை முற்றிலும் அழித்தொழிக்க முடியும் என உலக சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|