|
| பில்ராத்: ரத்தமின்றி இதய அறுவை சிகிச்சை! |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 17:53 IST ) | |
சென்னை பில்ராத் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக் குழுவினர், 75 வயது முதியவருக்கு ரத்தம் செலுத்தாமலேயே இதய வால்வு மற்றும் இதய பை-பாஸ் அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த திருமலாச்சாரி (75) என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டாக இதயநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இதயத்தில் சுத்திகரிக்கப்படும் ரத்தத்தை மற்ற உடல் பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் பெரிய ரத்தக்குழாயான மகா தமனியில் அடைப்பு இருந்ததே இதற்கு காரணம்.
சென்னையில் உள்ள பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், பிறருடைய ரத்தத்தை பெற்று, இதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள விரும்பவில்லை.
இதனால், ரத்தம் செலுத்தாமல் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்வது குறித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதன்படி, வாரம் ஒரு முறை இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் "எரித்ரோ புரோட்டீன்' ஊசி திருமலாச்சாரிக்குப் போடப்பட்டது. ஒருமாதம் ஊசி போட்டதும் அவரது உடலில் ரத்த ஹீமோகுளோபின் அளவு 12.6 கிராம் ஆக உயர்ந்தது.
இதையடுத்து, கடந்த மாதம் 19ம் தேதி அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதயம் துடித்துக் கொண்டிருக்கும்போதே பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. செயற்கை இதய - நுரையீரல் இயந்திரத்தின் உதவியுடன் புதிய வால்வும் பொருத்தப்பட்டது.
எந்த ரத்த இழப்பும் இல்லாமலும், புதிய ரத்தம் செலுத்தாமலும் இரு அறுவை சிகிச்சைகளும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
இதனால், அறுவை சிகிச்சை முடிந்த இரு நாட்களிலேயே அவர் படுக்கையில் இருந்து எழுந்து நடக்கத் தொடங்கி விட்டார். கடந்த மாதம் 26ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் ஆகி நலமுடன் வீடு திரும்பினார்.
பில்ராத் மருத்துவமனையின் தலைமை இதய அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.தியாகராஜ மூர்த்தி, இதய மருத்துவ நிபுணர் கே. தாமோதரன், மயக்க மருத்துவ நிபுணர்கள் நெடுமாறன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், ரத்தமின்றி வெற்றிகரமாக செய்துமுடித்த இந்த இதய அறுவை சிகிச்சை, மருத்துவத் துறையில் ஓர் சாதனையாக கருதப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|