யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
ஏழை குழந்தை இதய சிகிச்சை: நிதியுதவி அதிகரிப்பு
செவ்வாய்கிழமை, 30 டிசம்பர் 2008   ( 18:27 IST )
ஏழைக் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சைக்கு அளித்து வரும் உதவித் தொகையை த‌‌மிழக அரசு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக த‌மிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:

பள்ளிக் குழந்தைகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக 17 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தேசிய ஊரக சுகாதார நிதியிலிருந்து இருதய அறுவை சிகிச்சைக்கான நிதியை ஒதுக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டும் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி தரப்படும்.

கடந்த காலங்களில் சாதாரண இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.10,000, பெரிய அளவில் நடக்கும் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சைக்கு ரூ.70,000 என உதவித் தொகை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்தத் தொகை முறையே ரூ.20,000, ரூ.50,000, ரூ.1 லட்சம் என்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சையை மருத்துவ மற்றும் ஊரக சுகாதார இயக்குநர் மேற்பார்வையிட வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நீரிழிவால் உடலுறுப்பு இழந்தவர்களுக்கு சலுகை
ஊக்க மருந்துகளால் கர்ப்பிணிகளுக்கு ஆபத்து
டாக்டர் பற்றாக்குறையை தடுக்க நடவடிக்கை
வங்கி அதிகாரி உறுப்பு தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு
மியூசிக் கேட்டால் கொழுப்பு குறையும்!
தண்டுவட பாதிப்புக்கு புதிய சிகிச்சை!
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...