|
| நீரிழிவால் உடலுறுப்பு இழந்தவர்களுக்கு சலுகை |
| திங்கள்கிழமை, 29 டிசம்பர் 2008 ( 19:55 IST ) | |
சர்க்கரை நோயால் உடலுறுப்புகளை சிறுவயதிலேயே இழந்தவர்களுக்கு ஊனமுற்றோருக்கான அரசு சலுகைகள வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
அண்மையில் சென்னை நகரில் 'நீரிழிவு நோய்- 2008' எனும் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கண்காட்சி நடைபெற்றது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், இதை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் வந்தால் கட்டுப்பாடான உணவு முறைகளையும், மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக் கொண்டு உயிர் வாழலாம். ஆனால் குழந்தைகளுக்கு, குறிப்பாக பிறக்கும் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் இருப்பது மிகவும் கொடுமையானது.
சர்க்கரை நோய் காரணமாக கை, கால் போன்ற உறுப்புகளை இழக்க நேரிடும் குழந்தைகளுக்கு, பிறவியிலேயே ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் அரசின் சலுகைகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலோ அல்லது அதற்கு முன்னரோ வெளியிடப்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்.... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்... |
| |
|
|
|
|
|
|
|