யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
அபார்ஷன் வலியை குறைக்கும் 'ஹிப்னோசிஸ்'!
இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி மருந்துகளும் ரொம்பவே மலிந்து விட்டன.

என்றாலும், பெரும்பாலான சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள் பாதுகாப்பானதாக இருப்பதில்லை. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்து மாத்திரைகளால் உடல் உபாதைகள் மேலும் அதிகமாகும்.

இந்நிலையில், கருச்சிதைவுக்கு 'ஹிப்னோசிஸ்' எனப்படும் தன்னிலை மறந்த சிகிச்சை நல்ல பலன்களை தருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கனடாவில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதற்காக முதல்முறையாக கருச்சிதைவு (அபார்ஷன்) ஆன 350 பெண்கள் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் 175 பெண்களை 'ஹிப்னோஸிஸ்' முறையில் ஆழ்நிலை உறக்கத்தில் ஆழ்த்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற பெண்களுக்கு சாதாரண முறை சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், ஹிப்னாஸிஸ் முறையில் சிகிச்சைப் பெற்ற பெண்கள் விரைவில் குணமடைந்தனர். அவர்களுக்கு எவ்விதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. ஆனால், சாதாரண சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்கள் குணமடைய அதிக நாட்கள் ஆனது. அதோடு, அவர்களுக்கு பலவித இன்னல்களும் ஏற்பட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்!
குறை பிரசவத்துக்கு காரணமாகும் அயோடின் பற்றாக்குறை
'அரசு மருத்துவமனைகளில் நவீன வசதிகள்'
மது அடிமையாளர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்
எய்ட்ஸ் மருந்து தயாரிக்க பிரிட்டன் உதவி
டெல்லியில் தெற்காசிய சுகாதார மாநாடு
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...