யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்!
25 நவம்பர் 2008   ( 16:23 IST )
தினந்தோறும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் கொண்ட உணவுப் பொருள் முட்டை என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.

இந்நிலையில், நாள்தோறும் ஓர் முட்டை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு நல்லது என சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்தது.

இதை பின்பற்றி ஆஸ்திரேலியாவிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதில் எதிர்மறையான முடிவுகள் தெரியவந்தன.

அதன்படி, தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 சதவீதம் அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட அது அவர்களின் சர்க்கரை நோய் பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, பெண்கள் தினமும் ஒரு முட்டை வீதம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு 77 சதவீதமாக அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குறை பிரசவத்துக்கு காரணமாகும் அயோடின் பற்றாக்குறை
'அரசு மருத்துவமனைகளில் நவீன வசதிகள்'
மது அடிமையாளர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்
எய்ட்ஸ் மருந்து தயாரிக்க பிரிட்டன் உதவி
டெல்லியில் தெற்காசிய சுகாதார மாநாடு
டிவி-யை அதிகம் நாடும் மகிழ்ச்சி இல்லாதவர்கள்
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...