|
| குறை பிரசவத்துக்கு காரணமாகும் அயோடின் பற்றாக்குறை |
கருச்சிதைவு, குறைப் பிரசவம் போன்றவற்றுக்கு அயோடின் பற்றாக்குறை காரணமாக அமைந்து விடுவதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நலப் பயிற்சி நிலையத்தில் அயோடின் உப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (நவ.21) நடைபெற்றது.
இதில் பேசிய மத்திய அரசின் உப்பு ஆணையர் எஸ். சுந்தரேசன், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் அயோடின் உப்பை 41 சதவீதத்தினர் மட்டுமே பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
அயோடின் பற்றாக்குறையால் கருச்சிதைவு, குறைப் பிரசவம், சிசு இறப்பு போன்றவை ஏற்படுவதாகக் கூறிய அவர், நரம்பியல் குறைபாடுகள், வலிப்பு, மாறுகண் போன்றவற்றுக்கும் இது காரணமாகிறது என்றார்.
இதேபோல் மூளை வளர்ச்சி, பெண் பூப்பெய்தும் பருவம், பேறு காலம், பாலூட்டும் காலங்களிலும் அயோடின் சத்து மிகவும் தேவைப்படுவதாக, இந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|