யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
'அரசு மருத்துவமனைகளில் நவீன வசதிகள்'
தனியார் மருத்துவமனைகளில் உள்ளதைப் போல் அரசு மருத்துவமனைகளில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ இதய மருத்துவமனையில் வியாழனன்று அதிநவீன 320 சி.டி. ஸ்கேன் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதில் கலந்து கொண்டு, சி.டி. ஸ்கேனை இயக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து சிகிச்சை பெறுவதற்காக அப்பல்லோவுக்கு வருகிறார்கள். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சி.டி. ஸ்கேன் மூலம் இதயம், மூளை ஆகியவை துல்லியமாக ஸ்கேன் செய்து, பாதிப்புகளைக் கண்டறிய முடியும்.

இதுபோன்ற சிறப்பு, நவீன வசதிகள் அரசு மருத்துவமனைகளிலும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகளில் தான் சிறப்பான வசதிகள் உள்ளன.

இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

இந்த புதிய வகை சி.டி. ஸ்கேன் மூலம் 13 ஆயிரம் ஸ்கேன்கள் செய்ய முடியும். 64 சிடி ஸ்கேனைவிட இது 5 மடங்கு துல்லியமாக ஸ்கேன் செய்யும். இதற்கு கட்டணம் ரூ.19,500 ஆகும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மது அடிமையாளர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்
எய்ட்ஸ் மருந்து தயாரிக்க பிரிட்டன் உதவி
டெல்லியில் தெற்காசிய சுகாதார மாநாடு
டிவி-யை அதிகம் நாடும் மகிழ்ச்சி இல்லாதவர்கள்
இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்!
தேசிய மதுப்பழக்க தடுப்புக் கொள்கை: மத்திய அரசு முடிவு!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...