|
| மது அடிமையாளர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் |
மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளோருக்கு மறு வாழ்வு அளிக்கும் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மது- போதை அடிமை நோயாளிகள், தெருவோரச் சிறுவர்கள், சமுதாயத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி மறுவாழ்வு மையங்களில் தங்கி இருப்பவர்கள் ஆகியோருக்கு இலவச உணவு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'முழு மனிதராக குணமடைதல்' என்ற திட்டத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த சிகிச்சை திட்டத்தின் ஒரு பகுதியாகவே இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
போதைப் பொருள் மற்றும் குற்றம் இழைப்பதில் இருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை வழங்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
இதற்குத் தேவையான வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
பாதிப்புக்கு ஆளானோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கலந்தாய்வு நடத்துதல், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதே இந்த புதிய திட்டத்தின் நோக்கம் என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இதர அமைப்புகள் மூலம் இது செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் சொன்னார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|