|
| டெல்லியில் தெற்காசிய சுகாதார மாநாடு |
தெற்காசிய நாடுகள் அளவிலான 4 நாள் சுகாதாரத்துறை மாநாடு புதுடெல்லியில் செவ்வாயன்று (நவ.18) தொடங்குகிறது.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் நடைபெறவுள்ள 3-வது தெற்காசிய சுகாதார மாநாட்டை, புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைக்கிறார்.
'கண்ணியம் மற்றும் உடல் நலத்திற்கு அடிப்படை சுகாதாரம்' என்ற கருத்தின் அடிப்படையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி, கழிவறைகளைத் தாண்டிய சுகாதாரம், சுகாதாரத் துறையில் நிறுவனங்கள் மற்றும் கூட்டு நடவடிக்கை உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு விஷயங்கள், இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
தெற்காசிய நாடுகளில் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது, மில்லினியம் வளர்ச்சி இலக்கான, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்தல், உலக மாநாட்டில் அளித்த நீடித்த வளர்ச்சி குறித்த உறுதி மொழியை நிறைவேற்றுதல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உறுப்பினர்கள், சர்வதேச மற்றும் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாநில அதிகாரிகள், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு உறுப்பினர்கள், உள்ளூர் அமைப்பு மற்றும் சயஉதவிக் குழு உறுப்பினர்கள், சமூக அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர், இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|