யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்!
குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் இன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயால் நாள்தோறும் சுமார் 200 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 15 வயதுக்குட்பட்ட சுமார் 70 ஆயிரம் பேர் இந்நோய்க்கு ஆளாகின்றனர். உலகம் முழுவதும் 24 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் 4 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் உள்ள 8 சதவீத சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் வசிக்கின்றனர்.

போதிய மருத்துவச் சிகிச்சை அளிக்காவிட்டால் இந்நோய் உயிருக்கே ஆபத்தாய் முடியும். கடந்த ஆண்டு மட்டும் இந்நோய்க்கு 38 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். இனி சர்க்கரை நோய்க்கு எவரும் பலியாகக் கூடாது என்பதே இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வின் நோக்கம்.

இந்நோய் பெரும்பாலும் உடல் பருமனான குழந்தைகளையே தாக்குகிறது. நமது அடிவயிற்றில் சேரும் கொழுப்புதான் சர்க்கரை நோய்க்கு முதல் படி.

எனவே, கொழுப்பு குறைவான உணவுப் பொருட்களையே சாப்பிடுவது, வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்ப்பது மற்றும் முறையான உணவுப் பழக்க வழக்கத்தின் மூலம் சர்க்கரை நோயை தவிர்க்கலாம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தேசிய மதுப்பழக்க தடுப்புக் கொள்கை: மத்திய அரசு முடிவு!
இருதய நோயாளிகளுக்கு மரபணு சிகிச்சை!
பல் மருத்துவம்: ஜப்பான் பல்கலை- ராமச்சந்திரா கூட்டு
வீடுகளில் பிரசவம் வேண்டாம்: அரசு உத்தரவு
இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்!
5 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...