|
| தேசிய மதுப்பழக்க தடுப்புக் கொள்கை: மத்திய அரசு முடிவு! |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008 ( 17:52 IST ) | |
மக்களிடையே மதுப்பழக்கத்தை குறைக்கும் நோக்கில், அப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'தேசிய மதுப்பழக்க தடுப்புக் கொள்கை'யை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறியதாவது:
'தேசிய மதுப்பழக்க தடுப்புக் கொள்கை'யை அமல்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. மக்கள் நலன் கருதி மாநில அரசுகள் இக்கொள்கையை அமல்படுத்தலாம் என்று மட்டுமே மத்திய அரசு வலியுறுத்தும்.
மதுப்பழக்கத்தின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கொள்கையின் முக்கிய நோக்கம்.
நாட்டில் தற்போது 6 முதல் 7 கோடி மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் 50% பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடைபெறும் சாலை விபத்துகளில் 40 சதவீதம், குடிப்பழக்கத்தினாலே ஏற்படுகிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மதுபானம் பயன்படுத்துபவர்களின் சராசரி வயது 19 என்ற அளவில் இருந்து தற்போது 13.5 ஆக சரிந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|