யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
இருதய நோயாளிகளுக்கு மரபணு சிகிச்சை!
இருதய நோயாளிகளுக்கு முதற்கட்டமாக மரபணு சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களை விரைவில் குணப்படுத்த முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில், தேவையான அளவு மருந்து அளிக்கப்பட்டு அவர்களின் நோய் தன்மை மதிப்பீடு செய்யப்பட்டது.

பின்னர், பிரத்யேகமாக மரபணு சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் என்ஸைம் எனப்படும் சுரப்பு உற்பத்தி இதயத்தின் செயல்பாட்டினை மேம்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

6 மாத கால சிகிச்சைக்கு பின்னர், 9 நோயாளிகளில் 7 பேருக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் திருப்தியளித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட ஆய்வுக்கு விஞ்ஞானிகள் தயாராகியுள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பல் மருத்துவம்: ஜப்பான் பல்கலை- ராமச்சந்திரா கூட்டு
வீடுகளில் பிரசவம் வேண்டாம்: அரசு உத்தரவு
இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்!
5 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்
நினைவாற்றலை பெருக்கும் பால், மீன்
சென்னையில் புற்று நோய் தடுப்பு மையம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...