|
| நினைவாற்றலை பெருக்கும் பால், மீன் |
பால், மீன் சாப்பிடுவதால் முதுமைக் காலத்தில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுவதாக, மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் அகாடமி அண்மையில் வெளியிட்ட மருத்துவ ஆய்வு அறிக்கையில் இத்தகவலைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 61 முதல் 87 வயது வரையில் உள்ள 107 பேருக்கு மூளை ஸ்கேன், நினைவாற்றல் சோதனை, உடற்பயிற்சி பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதில், மீன், மாமிசம், பால் போன்ற வைட்டமின் பி- 12 அதிகம் உள்ள உணவை உட்கொள்பவர்களுக்கு அதிக நினைவாற்றல் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு அதில் உள்ள பி- 12 அளவும் ஆய்வு செய்யப்பட்டது. மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து ஸ்கேன், நினைவாற்றல் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், வைட்டமின் பி- 12 அளவு அதிகம் உள்ளோருக்கு, பி- 12 குறைவாக உள்ளவர்களைக் காட்டிலும் 6 மடங்கு அதிகம் நினைவாற்றல் உறுதி செய்யப்பட்டது.
வயதான காலத்தில் மீன், பால் போன்ற உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியும் என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|