யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
சென்னையில் புற்று நோய் தடுப்பு மையம்
சென்னையில் ரூ. 800 கோடி செலவில் தேசிய புற்று நோய் தடுப்பு மையம் அமைக்கப்படுகிறது.

சென்னை தாம்பரம் பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், ரூ. 28 கோடி செலவில் அமைக்கப்படவிருக்கும் இந்திய செவிலியர் பயிற்சி நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இவ்விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கவும், நோய் வராமல் தடுப்பு நடவடிக்கைகள் - ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் தேசிய புற்று நோய் தடுப்பு மையம் அமைக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு.

அதன்படி சென்னையில் ரூ. 800 கோடி செலவில் இதற்கான மையம் அமைக்கப்படும். இந்த மையத்திற்கு சென்னை நகரில் இடம் ஒதுக்கப்படாவிட்டாலும் கூட புறநகரில் 50 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கித் தர வேண்டும்.

சென்னை எழும்பூர் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு ரூ.100 கோடி, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை விரிவாக்கத்திற்கு ரூ. 4 கோடி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்கு ரூ. 150 கோடி உட்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அன்புமணி கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருத்துவக்காப்பீடு
சென்னை: கருப்பைக்கு வெளியே வளர்ந்து பிறந்த குழந்தை!
நீரிழிவு சிகிச்சைக்கு செலவிடும் தொகை யு.எஸ்.சில் அதிகரிப்பு
கருப்பை புற்று நோய்க்கு தடுப்பூசி அறிமுகம்
யானைக்கால் நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை
நரம்பியல் நோயை குணமாக்கும் சோயா பீன்ஸ்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...