|
| சென்னை: கருப்பைக்கு வெளியே வளர்ந்து பிறந்த குழந்தை! |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2008 ( 15:37 IST ) | |
தாயின் கர்ப்பப்பைக்கு வெளியே பெருங்குடலை ஒட்டி வளர்ந்த அதிசய குழந்தை, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை சேர்ந்த தம்பதி முனுசாமி - மீனா (30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மீனா கடந்த 12ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மீனாவை பரிசோதித்தபோது, அவரது கருப்பைக்கு வெளியே பெருங்குடல் அருகே ஆண் குழந்தை வளர்வது தெரியவந்தது. குழந்தையை அறுவைச் சிகிச்சை மூலம் டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.
இதுகுறித்து டாக்டர் கலீல் ரஹ்மான் நிருபர்களிடம் கூறியதாவது:
கருப்பை அல்லது கருக்குழாயில் இல்லாமல் வெளியே கரு உருவாவது அதிசயமான ஒன்று. இந்த குழந்தை பெருங்குடல் பகுதியில் வளர்ந்துள்ளது. மீனா கருவுற்றதும், கரு, கர்ப்பப் பைக்கு போகாமல், கருக் குழாயிலேயே இருந்துள்ளது.
மூன்று அல்லது நான்காவது மாதத்தில், கருக்குழாயை உடைத்து வெளியே வந்து, கருப்பைக்கு கீழேயுள்ள பெருங்குடல் பகுதியில் ஒட்டிக் கொண்டுள்ளது. இதனால், மீனாவுக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
மீனா செய்யாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது, கர்ப்பப் பைக்கு வெளியே குழந்தை வளர்வது அவர்களுக்குத் தெரியவில்லை. தொப்புள் கொடி நீளமாக இருந்ததால் குழந்தைக்கு சீரான சுவாசம் கிடைத்துள்ளது. நிறைமாதம் ஆனதும் வலி அதிகமாகி இங்கே வந்துவிட்டார்.
பொதுவாக, கருப்பைக்கு வெளியே உருவாகும் குழந்தைகள் சில மாதங்களிலேயே இறந்துவிடும். இப்படி இதுவரை உலகத்தில் நடந்த 109 பிரசவங்களிலும் குழந்தைகள் இறந்தே பிறந்துள்ளன.
இந்தியாவில் முழு வளர்ச்சியுடன் 2 குழந்தைகள் பிறந்துள்ளன. ராஜஸ்தானில் பிறந்த குழந்தை இறந்துவிட்டது. இந்த குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|