யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
செக்ஸுக்கு முக்கியத்துவம் தராத இந்தியர்கள்
இந்தியர்கள் செக்ஸுக்கு முக்கியத்துவம் தருவதை விட குடும்ப வாழ்வில் தான் அதிக அக்கறை செலுத்துவதாக, ய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

ஆசிய பசிபிக் செக்ஸ், சுகாதாரம் மற்றும் ஒட்டு மொத்த நலவாழ்வு அமைப்பு சார்பில் உலகில் 13 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு தரப்பட்ட தம்பதிகளிடம் வாழ்க்கைக்கு தேவையான 17 அம்சங்கள் குறித்து இதில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதில் குடும்ப வாழக்கை மீது தான் இந்தியர்கள் அதிகம் அக்கறை செலுத்துவது தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக எதிர்காலம் பற்றிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் 3-வதாக பணம் சம்பாதிப்பதும், 4-வதாக உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதும் இடம் பெற்றுள்ளது.

இந்திய ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் செக்ஸுக்கு 7-வது இடத்த்தைத் தான் அளித்துள்ளனர். அதே சமயம் பெண்கள் இதனை 14-வது இடத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

உலகில் அதிக பட்சமாக இந்தியர்கள்தான் செக்ஸ் விஷயத்தில் 'அதிக திருப்தி' அடைவதும் தெரிய வந்துள்ளது. 73 சதவீதம் இந்திய தம்பதிகள் செக்ஸில் முழு திருப்தி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் பிலிப்பைன்சில் 52 சதவீதத்தினரும், தாய்லாந்தில் 30 சதவீதத்தினரும், சீனாவில் 23 சதவீதத்தினரும், ஜப்பானில் 10 சதவீதத்தினரும் 'திருப்தி' தெரிவித்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ்' திட்டம்: அரசு விளக்கம்
சுகாதாரக் காப்பீட்டில் மகப்பேறு செலவும் சேர்ப்பு
கர்ப்பிணிகளுக்காக ரத்தசோகை தடுப்பு திட்டம்
புகைபிடிக்காதோருக்கு ஆயுள் அதிகம்: ஆய்வு
பாலும், பயன்களும்...
இந்தியாவில் 35 லட்சம் பேர் மனநோயாளிகள்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...