|
| 'ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ்' திட்டம்: அரசு விளக்கம் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 18 அக்டோபர் 2008 ( 17:14 IST ) | |
அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 'ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் இந்த அடையாள அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில ஊழியர்கள் ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, அதற்குரிய தொகையை தரும்படி ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் இதுபற்றி அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சைப் பெறவேண்டும். எந்த மாதிரியான சிகிச்சை தேவை என்பதை மருத்துவமனை மற்றும் ஸ்டார் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இதனடிப்படையில், முன் அனுமதி வழங்கப்படும்.
இந்த திட்டத்தின்படி, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையை மருத்துவமனையிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒவ்வொரு சிகிச்சைக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையைத் தான் குறிப்பிட வேண்டும். இதற்கு மேல் எந்தக் கட்டணத்தையும் மருத்துவமனை வசூலிக்கக்கூடாது.
இந்த நடைமுறைகளை மீறி, ஸ்டார் நிறுவனத்திடம் சிகிச்சைக்கான இழப்பீடு கோரும் எந்த மனுவும் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு அங்கீகரித்துள்ள மருத்துவமனைகளில் தற்போது மேலும் 37 மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளன. சென்னையில் உள்ள அடையாறு கேன்சர் மையம், அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அப்பல்லோ முதலுதவி மருத்துவமனை, அப்பல்லோ சிட்டி சென்டர், அம்மா மருத்துவமனை, ஆரோக்கியா மருத்துவமனை, அபிஜெய் மருத்துவமனை, வெங்கடேஷ்வரா மருத்துவமனை, பாரதிராஜா மருத்துவமனை, சிட்ரஸ் இ.என்.டி. லேசர் சர்ஜரி மருத்துவமனை, அம்மாயி கண் மருத்துவமனை அகியவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|