யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
சுகாதாரக் காப்பீட்டில் மகப்பேறு செலவும் சேர்ப்பு
சுகாதாரக் காப்பீடு திட்டத்தில் மருத்துவச் செலவையும் சேர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் அமைப்பு சாராத குடும்பங்களுக்கு 'ராஷ்டிரீய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா' என்ற மருத்துவக் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இத்திட்டம், தமிழகம், ஹரியானா, பஞ்சாப், குஜராத், பிக்கார், டெல்லி மாநிலங்களில் தற்போது அமலில் உள்ளது.

இத்திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீடு தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதில் மகபேறுக்கான மருத்துவச் செலவையும் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் புதுடெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி தரப்பட்டது.

இந்த காப்பீடு திட்டத்தில் மத்திய அரசு 75 சதவீத நிதியையும், மாநில அரசு 25 சதவீத நிதியையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கர்ப்பிணிகளுக்காக ரத்தசோகை தடுப்பு திட்டம்
புகைபிடிக்காதோருக்கு ஆயுள் அதிகம்: ஆய்வு
பாலும், பயன்களும்...
இந்தியாவில் 35 லட்சம் பேர் மனநோயாளிகள்
மருத்துவக் காப்பீடு: விழித்துக் கொள்ளாத இந்தியா
வைட்டமின் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...