|
| கர்ப்பிணிகளுக்காக ரத்தசோகை தடுப்பு திட்டம் |
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுப்பது தொடர்பான சோதனை முறை திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள இளம் பெண்கள், கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகளில் 94 சதவீதம் பேர் ரத்த சோகைக்கு ஆளாகின்றனர்.
இதை தடுக்க, தீவிர கண்காணிப்பு சிறப்பு திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. இதற்காக தானம் அறக்கட்டளை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சாணார்பட்டி (திண்டுக்கல்) கொட்டாம்பட்டி (மதுரை) முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) போடி நாயக்கனூர் (தேனி) ஆகிய ஒன்றியங்களில், ரூ.82.12 லட்சம் செலவில், 2 ஆண்டுகளுக்கு சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
ரத்த சோகை கணக்கெடுப்பு பணி, மக்களிடையே சுகாதார பழக்கங்களை ஏற்படுத்துவது ஆகியவை மூலம் வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை, 20 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|