|
| புகைபிடிக்காதோருக்கு ஆயுள் அதிகம்: ஆய்வு |
புகைபிடிப்பவர்களைக் காட்டிலும் அப்பழக்கம் இல்லாவதவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக, அமெரிக்காவின் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
புகைபிடிக்கும் பழக்கமானது மனிதனின் ஆயுளை ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை சுருக்கி விடுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
ஹெல்சின்கி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒய். ஸ்டான்ட்பெர்க், மற்றும் அவருடன் பணி புரிந்தவர்கள், 1919 ஆம் ஆண்டில் இருந்து 1934 ஆம் ஆண்டுக்குள் பிறந்த, முழு ஆரோக்கியம் உள்ளவர்களைக் கொண்டு இந்த ஆய்வை நடத்தினார்கள்.
ஏற்கனவே இவர்களிடம் கடந்த 1974 ஆம் ஆண்டில் உடற் பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருந்தன. மீண்டும் 2000 ஆண்டில் அவர்களின் புகைபிடிக்கும் பழக்கம், ஆரோக்கியம் குறித்து கேட்டறியப்பட்டது. அதேபோல் தற்போது அவர்களிடம் உள்ள பழக்க- வழக்கங்கள் குறித்து, மின்னஞ்சல் வாயிலாக விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், நாள் ஒன்றுக்கு 20 க்கும் மேற்பட்ட சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களைக் காட்டிலும், அப்பழக்கம் இல்லாதவர்களின் ஆயுள் சராசரியாக 10 ஆண்டுகள் அதிகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட மற்ற விஷயங்களிலும் புகைபிடிப்பவர்களைவிட புகை பிடிக்காதவர்களே சிறந்த முறையில் உள்ளனர் என்பதும் அதில் தெரிய வந்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|