யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
ஆயுளைக் கூட்ட 'மகிழ்வு'டன் இருப்பீர்!
ஜோகன்னஸ்பர்க் (ஏஜென்சி), சனிக்கிழமை, 16 ஆகஸ்டு 2008   ( 15:29 IST )
'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது நம் சான்றோர்களின் வாக்கு.

அந்த வாக்கினை, பல்வேறு நாடுகளின் மருத்துவ ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன.

சிரிப்பைப் போன்றே எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதும், வாழ்நாளை நீட்டிக்கும் என்கிறது, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வு.

எராமுஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசாரியர் ரூத் வீன்ஹோவன் தலைமையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்த விவரம், அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

மனிதனின் ஆயுளை நீட்டிப்பதில் மகிழ்ச்சியின் பங்கினைப் பற்றிய இந்த ஆய்வில், அனைவருக்கும் சந்தோஷத்தைத் தரும் முடிவுகள் வெளியாகவுள்ளன.

ஆம், அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களது ஆயுட்காலம், ஏழரை முதல் 10 ஆண்டுகள் வரை உயர்வதாக, ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வானது, கடந்த 60 ஆண்டுகளில் மொத்தம் 30 ஆய்வுகளை பகுத்தாய்ந்து கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்நாளில் நம்மை அண்டும் நோய்களில் இருந்து காத்துக் கொள்ளும் வல்லமையும், மகிழ்ச்சிக்கு உண்டு என்கிறது, அந்த ஆய்வு.

மகிழ்ச்சியான மனிதர்கள் தங்களது உடல் எடை, நோய்களின் அறிகுறியை அறிந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படுதல், புகை மற்றும் மது பழக்கத்துக்கு ஆளாகாமல் இருத்தல் (அப்பழக்கங்கள் இருந்தாலும், அளவுடன் செயல்படுதல்), ஆரோக்கிய வாழ்வுக்கு தேவையானதை கடைப்பிடித்தப் போன்றவற்றில் அக்கறையுடன் செயல்படுவர்.

அத்துடன், தன்னம்பிக்கையும் ஊக்கமும் பெற்று வெற்றியாளர்களாக, மகிழ்ச்சி நிரம்பியவர்கள் திகழ்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆரோக்கியம்: பேச்சிலர்கள் கவனிக்க....
தொட்டதெற்கெல்லாம் மாத்திரை'யால் பேராபத்து : ஆய்வு
குண்டு உடம்புக்கு காரணம் மரபணு!
அபூர்வ நோய்க்கு சிகிச்சை: டெல்லி மருத்துவர்கள் சாதனை
நினைவாற்றலை அதிகரிக்கும் மீன்
கருப்பை கட்டிகளை நீக்க நவீன சிகிச்சை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...