|
| ஆரோக்கியம்: பேச்சிலர்கள் கவனிக்க....
| | - பெரு |
| நியூயார்க் (ஏஜென்சி), 14 ஆகஸ்டு 2008 ( 16:57 IST ) |
|
திருமணமாகாத பேச்சிலர்களை விட திருமணமானவர்கள் அதிக உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள மிசிகான் பல்கலைக் கழக சமூகவியல் துறையின் துணை பேராசிரியர் ஹய் லியூ தலைமையிலான குழுவினர், இதுகுறித்து ஆய்வு செய்தனர்.
'மாறும் தன்மை: திருமண நிலையும் ஆரோக்கிய மாறுபாடும் 1972 முதல் 2003 வரை' என்ற தலைப்பில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, திருமணம் ஓர் ஆண் மற்றும் பெண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக, பெண்களை விட ஆண்களுக்கு தான் திருமண பந்தம் அதிக ஆரோக்கியத்தை தருகிறது.
வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்யாத ஒருவரின் ஆரோக்கியத்தை, திருமணமான மற்றொரு ஆணுடன் ஒப்பிட்டால் திருமணமானவரே அதிக ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக, திருமணமான மற்றும் திருமணமாகாத பல்வேறு ஆண், பெண்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|