யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
இந்தியர்கள் புகைப்பதை கைவிட வேண்டும் : பில் கேட்ஸ்
நியூயார்க் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 14:14 IST )
இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸும், நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்கும் தொடங்கினர்.

வளரும் நாடுகளைக் குறிவைத்து, உலகின் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில், புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு 500 மில்லியன் டாலர்களை இவ்விருவரும் வழங்கியுள்ளனர்.

இந்தத் தொகையானது, அரசுடன் இணைந்து புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடும் தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என பில் கேட்ஸும், மைக்கேல் ப்ளூம்பெர்கும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

"இந்த பிரச்சாரத்தில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது சிறப்பு கவனம் ௦செலுத்த வேண்டும்," என்று பில்கேட்ஸ் கூறினார்.

ப்ளூம்பெர்க் கூறுகையில், "சீனாவில் சிகரெட் தயாரிப்பில் அரசே நேரடியாக ஈடுபட்டுள்ளது. எனவே, அந்நாட்டில் புகையிலைப் பழக்கம் குறைவது சிறுது கடினம்தான்," என்றார்.

மேலும், "புகையிலைப் பொருட்கள் இல்லாத உலகம், மக்களின் ஆயுளை நீட்டிப்பதோடு, மகிழ்ச்சி நிரம்பியை வாழ்வையும் தரும்," என்றார், முன்னாள் சிகரெட் பிரியரான ப்ளூம்பெர்க்.

வரும் 2012-ல் உலகளாவிய புகையிலைப் பொருட்களின் வர்த்தகம், 464 பில்லியன் டாலர்கள் அளவில் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புகையிலை பொருட்கள் இல்லாத இந்தியா: அன்புமணி அழைப்பு
அறுபது ஆண்டுகளாக மதுவிலக்கை கடைப்பிடிக்கும் கிராமம்
தமிழகத்தில் மருத்துவர்களை பாதுகாக்க அவசர சட்டம்
உறுப்பு மாற்று சட்டத்தில் திருத்தம்: மக்கள் கருத்து கேட்பு
பெண்களை குறிவைக்கும் ரத்தசோகை!
தவறான வாழ்க்கை முறையே சுட்டிகளை குண்டாக்குகிறது: ஆய்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...