|
| புகையிலை பொருட்கள் இல்லாத இந்தியா: அன்புமணி அழைப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 16:17 IST ) | |
புகையிலை பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மாணவர்களை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கம் சார்பில் நடந்த 'சிகரெட் இல்லா பல்கலைக்கழக வளாகத்தை உருவாக்குவோம்' என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அன்புமணி நேற்று கலந்துகொண்டு பேசியதாவது:
இந்தப் பல்கலைக்கழகத்தில் சிகரெட் இல்லா சூழ்நிலையை உருவாக்க மாணவர்கள் எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது. புகை பிடிக்கும் பழக்கத்தை தடுக்க வகை செய்யும் விழிப்புணர்வு மையம் ஒன்று, டெல்லி பல்கலைக்கழகத்தில் விரைவில் அமைக்கப்படும்.
சிகரெட் மட்டும் இன்றி, புகையிலை தொடர்பான எந்த பொருட்களும் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.
புகை பிடிக்கும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் பரவுவதற்கு, திரைப்படங்கள் முக்கிய காரணம் என்பதால், சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்கக் கூடாது.
சிகரெட் இல்லாத சண்டிகார் நகரை உருவாக்க போவதாக, அரியானா மாநில அரசு அறிவித்துள்ளதும், 2010-ம் ஆண்டு நடக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக, டெல்லியை சிகரெட் இல்லாத மாநிலமாக உருவாக்குவதாக, அம்மாநில முதல்வர் அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியது.
புகையிலை ஒழிப்பு சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதால், தனியார் மற்றும் பொது கட்டிடங்கள் எதிலும் சிகரெட் பிடிக்க கூடாது என்று, ஒட்டு மொத்தமாக மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது என்று அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|