யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
தமிழகத்தில் மருத்துவர்களை பாதுகாக்க அவசர சட்டம்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008   ( 15:52 IST )
தமிழகத்தில் மருத்துவர்களைப் பாதுகாப்பதற்கான அவசர சட்டத்தை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

இச்சட்டத்தின்படி, ஒரு மருத்துவர் மீதோ அல்லது மருத்துவ நிறுவனம் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால், அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை இனி சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை௦௦ நேற்று கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த மருத்துவர்கள் தின விழாவில் கலந்துகொண்டு, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசுகையில் மேற்குறிப்பிட்ட தகவலைத் தெரிவித்தார்.

ஆந்திர பிரதேசத்தில் மருத்துவ அலுவலர்களை பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு இணையான வகையில் தமிழகத்திலும், மருத்துவர்களை பாதுகாக்கும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இவ்விழாவில் சுகாதாரத் துறை செயலாளர் வி.கு.குப்புராஜ் பேசுகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டமானது, மருத்துவர்களைப் பாதுகாக்கும் கேடயம் என்று குறிப்பிட்டார்.

பதிவு பெற்ற மருத்துவர்கள், பதிவு பெற்ற செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலிய மாணவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த அவசரச் சட்டம் பாதுகாப்பு வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உறுப்பு மாற்று சட்டத்தில் திருத்தம்: மக்கள் கருத்து கேட்பு
பெண்களை குறிவைக்கும் ரத்தசோகை!
தவறான வாழ்க்கை முறையே சுட்டிகளை குண்டாக்குகிறது: ஆய்வு
நீரிழிவால் காசநோய் பாதிப்பு அதிகரிப்பு : ஆய்வு
2030-ல் உலகின் பாதி பேர் 'பருத்த வீரர்கள்'!
நுரையீரலை பொசுக்கும் தீ !
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...